Published : 20 Nov 2015 09:13 AM
Last Updated : 20 Nov 2015 09:13 AM

தங்க டெபாசிட் திட்டத்துக்கு வரவேற்பு குறைவு

இரண்டு வாரங்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தங்க டெபாசிட் திட்டத்தில் 400 கிராம் தங்கம் மட்டுமே வந்துள்ளது. 20,000 டன் தங்கம் இந்த டெபாசிட் திட்டத்தில் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்தியர்கள் வீடுகள் மற்றும் கோயில்களில் வைத்துள்ள தங்கத்தை வங்கியில் சேமிக்க வேண்டும் என்று மோடி வலி யுறுத்தினார். மேலும் மோடி அரசு தங்கப் பத்திரம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. சேமிப்பிற்கு குறைவான வட்டி வழங்குவதும் இந்த திட்டத்தின் குறைபாடாக உள்ளது.

இது குறித்து இந்தியாவின் ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி கவுன்சிலின் வடக்கு மண்டல தலைவர் அனில் சங்க்வால் பத்திரிகையாளர்களிடம் கூறுகை யில் ``தங்கத்தை மதிப்பீடு செய்யக் கூடிய மையங்கள் குறைவாக இருப்பதுதான் டெபாசிட் திட்டத்தின் பிரச்சினையாக உள்ளது என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரை 400 கிராம் தங்கமே இத்திட்டத்தின் கீழ் வந்துள்ளது என அவர் கூறினார்.

அரசாங்கம் இந்த திட்டத்தை மறுபரீசீலனை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

ஜெம் மற்றும் ஜுவல்லரி சங்கத்தினர் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸை சந்தித்து பேசினர். அப்போது அங்கீகரிக் கப்பட்ட 13,000 ஜூவல்லரி நிறுவனங் களும் (பிஐஎஸ்) இந்த திட்டத்தின் ஏஜென்டாக நியமிக்கப்படும் போது இந்த திட்டத்துக்கு மேலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சங்வால் கூறினார். இந்த திட்டத்துக்கான ஏஜென்டுகளை நியமிப்பதில் காலதாமதம் கூடாது 15 நாட்களுக்குள் இதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று சக்தி காந்த தாஸிடம் கோரிக்கை வைத்தனர்.

ஜூவல்லரி சங்கத்தை தவிர, ரிசர்வ் வங்கி, பிஐஎஸ், எம்எம்டிசி மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் தற்போது அங்கீகாரம் பெற்ற 29 மதிப்பீடு மையங்கள் மற்றும் 4 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதை 55 மதிப்பீடு மையங்களாகவும் மற்றும் 20 சுத்திகரிப்பு நிலையங்களாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திட்டமான இந்திய தங்க நாணயங்கள் திட்டம் தங்க டெபாசிட் திட்டத்தை விட சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை 6,200 அசோக சக்ர நாணயங்கள் விற்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x