

ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் 6 சதவீத பங்கு களை இரு நிறுவனங்களிடம் ஐசிஐசிஐ வங்கி விற்றுள்ளது. 1,950 கோடி ரூபாய் மதிப் பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
4 சதவீத பங்குகள் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவ னத்துக்கும், 2 சதவீத பங்குகள் சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான கம்பாஸ்வாலே முதலீட்டு நிறுவனத்துக்கும் விற்கப்பட்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்த பரிவர்த்தனைக்கு பிறகு மூலமாக நிறுவனத்தின் மொத்த மதிப்பு 32,500 கோடி ரூபாயாக மதிப் பிடப்பட்டிருக்கிறது.
ஒப்புதல்
6 சதவீத பங்குகளை விற் பதற்கு வங்கியின் இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த பங்கு விற்பனைக்கு பிறகு இந்த நிறுவனத்தின் பங்கு ஐசிஐசிஐ வங்கி வசம் 68 சதவீதம் இருக்கும். வெளிநாட்டு கூட்டு நிறுவனமான புருடென்சியல் பிஎல்சி 26 சதவீத பங்கு களை வைத்திருக்கிறது. தவிர முழு நேர இயக்குநராக விஷாகா முல்யே நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இவர் தற்போது ஐசிஐசிஐ வென்ச்சர் பண்ட்ஸ் மேனேஜ் மெண்ட் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.
கடந்த மாதம் ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகள் கனடாவை சேர்ந்த பேர்பாக்ஸ் பைனான் ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவ னத்துக்கு விற்கப்பட்டது.
இதன் மதிப்பு 1,550 கோடி ரூபாய் ஆகும். ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி வசம் 64 சதவீத பங்குகளும், பேர்பாக்ஸ் வசம் 35 சதவீத பங்குகளும் உள்ளன.