

மாகி நூடுல்ஸை இம்மாதத்தில் மீண்டும் கொண்டு வர நெஸ்லே நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அனைத்து விதமான சோதனை முடிவுகளும் முடிவடைந்த நிலையில் இம்மாத இறுதியில் சந்தைப்படுத்த நெஸ்லே நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
புதிதாக தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரிகளுக்கான மூன்று சோதனை முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக வந்திருக்கிறது. இதன் மூலம் நூடுல்ஸ் பாதுகாப்பானவை என்று நெஸ்லே நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
விரைவில் இதனை சந்தைப் படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இது குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். இப்போதைக்கு மத்திய அரசு நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் 640 கோடி ரூபாய் வழக்கு மட்டுமே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 23-ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.