

ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை திரும்ப அளிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று இந்திய ஏற்றுமதி சம்மேளனம் (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நேற்று முன் தினம் பல பொருள்களுக்கு ஏற்றுமதி வரியை திரும்ப அளிக்கும் அளவை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. உருக்கு, ஜவுளி மற்றும் கடல் உணவு பொருள்களுக்கு சலுகை அறிவித்தது. கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவாக இந்திய ஏற்றுமதி சரிந்ததை அடுத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இத்தகைய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சில இன்ஜினீயரிங் பொருள் களுக்கு 2 சதவீத சுங்க வரியை மத்திய அரசு உயர்த் தியது. இறக்குமதி செய்யப்படும் உருக்கு உள்ளிட்ட பொருள் களைக் கொண்டு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு இது பாதிப்பாக இருக்கும். எனவே வரிச் சலுகை அறிவிக் கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி அதிகரிக்க வழிவகுக்கும் என்று எப்ஐஇஓ தலைவர் எஸ்.சி. ரத்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பை ஏற்றுமதியாளர்கள் அதற்குரிய ரசீதை காண்பித்து திரும்பப் பெற முடியும்.
தற்போது அரசு அறிவித்த ஏற்றுமதி சலுகைகள் உறைய வைக்கப்பட்ட இறால், மனம் கூட்டப்பட்ட அகர்பத்தி, முழுமையான தோல் ஆடை பொருள்கள், தொழிற்சாலை களில் பயன்படுத்தப்படும் கையுறைகள், ஜவுளி ஆலை களில் தயாரிக்கப்பட்ட ஃபைபர் நூலிழை, ஆயத்த ஆடைகள் மற்றும் கையால் இயக்கப்படும் டூல்கள் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி சரிந்து வரும் நிலையில் அரசிடமிருந்து கூடுதல் சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது அளித்துள்ள சலுகை ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று ரத்தன் கூறினார்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்தே இந்திய ஏற்றுமதி சரிந்து வருவது குறிப் பிடத்தக்கது.