ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு: ஹெச்பி, டைட்டன் கூட்டு

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு: ஹெச்பி, டைட்டன் கூட்டு
Updated on
1 min read

கடிகாரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டாடா குழுமத்தின் அங்கமான டைட்டன் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஹெச்பி இன்கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிறந்த வடிவமைப்பில் வாடிக்கை யாளர்கள் எதிர்பார்க்கும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரிக்க டைட்டன் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இக்கூட்டணியின் ஸ்மார்ட் வாட்சுகள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நிறுவனங்களும் இணைந்து பிரத்யேகமான கடிகா ரத்தை இந்திய வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கும் என்று நம்புவதாக டைட்டன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவி காந்த் தெரிவித்தார்.

கடிகாரம் என்ற ஒரு பயன்பாட்டைத் தாண்டி பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டதாக ஸ்மார்ட் வாட்ச் இருக்கும் என்றும், நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இது இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

டைட்டன் நிறுவனம் டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கார்ப்ப ரேஷன் (டிட்கோ) கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனம் வாட்ச், தங்க ஆபரணம் மற்றும் கண் கண்ணாடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் (2014-15) ரூ. 11,791 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in