

வளர்ச்சியை மீட்டெடுப்பது தான் பட்ஜெட்டின் தலையாய நோக்கம் என்று நிதிச்சேவைகள் பிரிவின் செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் ஜூலை 10-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
அதிக வளர்ச்சியை கொண் டுவருவதுதான் முக்கிய நோக்கம். இதற்காக அனைத்து துறை அமைச்சகங்களும் வேலை செய்து வருகின்றன என்றார் சாந்து. ஆனால் என்னென்ன விஷயங்கள் நடந்து வருகின்றன என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது பாதியாக குறைந்துவிட்டது. முடிவுகள் எடுக்கப்படாததுதான் இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மின்சாரம், ஸ்டீல், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்கள் பல காரணங்களால் அமல்படுத் தப்படாமல் இருந்தன.
இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 21 டிரில்லியன் டாலர்கள் ஆகும். கடந்த ஜூன் மாதம் திட்டங்களை கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டாலும் பெரிய பயன் இல்லை.
பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே தெரிவிக்கப்படும். பட்ஜெட் என்பது ஒரு நாள் விஷயம் அல்ல. பல முக்கிய முடிவுகள் பட்ஜெட்டுக்கு பிறகு கூட எடுக்கப்படும் என்றார்.
அனைத்து துறை அமைச்சகங்களுடனும் சந்திப்பு நடந்துவிட்டது. இப்போதைக்கு எந்தெந்த துறையில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
ஊக்குவிப்பு நடவடிக் கைகள் குறித்து கேட்ட போது, அதை பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
சில இடங்களில் சலுகைகள் கொடுக்கப்படலாம் சில சலுகைகள் நிறுத்தப்படலாம் என்றார்.