Published : 22 Nov 2015 12:50 PM
Last Updated : 22 Nov 2015 12:50 PM

கார்ப்பரேட் வரியை 25 சதவீதமாக குறைக்க மத்திய நிதி அமைச்சகம் தீவிரம்

நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக படிப்படியாக குறைக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான வரைவு திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் தீட்டியுள்ளது.

மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் (சிபிடிடி) பரிந் துரையின்படி குறிபிட்ட காலத் திற்கான வரி விலக்கு விதிகள் புதுபிக்கப்பட உள்ளது. மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத் திற்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக (ஆர் அண்ட் டி) வழங்கப்படும் வரி விலக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு உரிய கால இடைவெளி மாற்றியமைக்கப் படாது. அதே போல் இந்த விதிகளுக்குரிய கால இடைவெளி நீட்டிக்கப்படாது எனவும் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது

உள்கட்டமைப்பு, சிறப்பு பொருளாதார மண்டலம், இயற்கை மற்றும் கனிம எண்ணெய்க்கான உற்பத்தி ஆகியவற்றுக்கான வரி விலக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் கார்ப்பரேட் மற்றும் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங் களுக்கான வருமானம் மற்றும் முதலீடு சார்ந்த விலக்குகள் நிறுத்தப்பட வேண்டும் என சிபிடிடி பரிந்துரைத்துள்ளது. இதற்கான பரிந்துரை தொடர்பான கருத்துகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் நிதியமைச் சர் அருண் ஜேட்லி, அடுத்த நான்கு ஆண்டிற்குள் வரி விலக்கு மற்றும் குறைப்பு ஆகியவற்றை பொறுத்து கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் வரி சட்டங்களை எளிமையானதாக மாற்ற வேண்டும். வரி விதிப்பில் வெளிப்படைத் தன்மை, தெளிவு ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த பரிந்துரைகள் தொடர்பாக அசோக் மகேஸ்வரி மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் அமித் மகேஸ்வரி கருத்து கூறுகையில், ``மற்ற நாடுகளின் வரி விதிப்புகளோடு போட்டி போடும் வகையில் வரி குறைப்பு இருக்க வேண்டும். குறைந்த வரி விகிதம் மூலம் வரி கட்டமைப்பை இன்னும் அகலப்படுத்த முடியும் என்று’’ கூறினார்.

இந்த பரிந்துரைகளுக்கான திட்டத்தை பற்றி மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் கூறும் பொழுது, வருமான வரி சட்டத்தின் படி குறிப்பிட்ட சொத்துக்களை பொறுத்து 100 சதவீதம் வரை வரி வீதம் குறைக்கப்பட வாய்ப் பிருக்கிறது.வருமான வரி சட்டத் தின் படி அதிகபட்சமாக 60 சதவீதம் வரை வரி விகிதத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், வரி குறியீடுகளை எளிதாக்குவதே அரசின் இலக்கு. விலக்கு தொடர்பாக பல்வேறு விதமான வேறுபாடுகள் நிறுவனங்களிடம் இருந்து வருவதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் எங்கள் இலக்கு, விலக்குகளை எளிதாக்கி வரி விகிதத்தை குறைப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x