Published : 07 Nov 2015 07:45 AM
Last Updated : 07 Nov 2015 07:45 AM

மூடி’ஸ் கருத்து அடிப்படை ஆதாரமற்றது: ஜெயந்த் சின்ஹா விமர்சனம்

இந்தியாவை பற்றி மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.

புதுடெல்லியில் நேற்று நடை பெற்ற பொருளாதார மாநாட்டில் இடையே செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

மூடி’ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மேலோட்டமாக இருக் கிறது. அரசாங்கம் மக்களுக்காக வேலை செய்துவருகிறது. இத னால் எதிர்கட்சிகள் பதற்றமடை கிறார்கள். இதனால் இது போன்ற கருத்துகள் வெளியாகின்றன. பிஹார் கருத்து கணிப்பு முடிவு கள் எங்களுக்கு எதிராக இருக்க லாம். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்றார்.

வோடபோன் விவகாரம்

வோடபோன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பான பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக தீர்த்துக் கொள்ள அரசு தயாராக உள்ளதாக ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.

வோடபோன் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கள், உறவினர்களிடம் தெரிவித் துள்ளதாக அவர் கூறினார்.

முன் தேதியிட்டு வரி விதித்தது தொடர்பாக வோடபோன் நிறுவன மும், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனமும் சர்வதேச தீர்ப்பாயத்தில் முறை யிட்டுள்ளன.

நிறுவனங்கள் வரி தொடர்பாக பிரச்சினைக்கு நீதிமன்றம் செல்வது குறைய வேண்டுமென்றால் வரி விலக்குகள் அளிப்பது நீக்கப்பட வேண்டும். அதேபோல நிறுவன வரி விதிப்புகள் குறைய வேண்டும் என்று சின்ஹா குறிப்பிட்டார்.

இவை தவிர வரி விதிப்பு முறைகளை எளிமைப்படுத்தும் நடைமுறைகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன என்ற அவர் நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். அத்துடன் திவால் குறித்த வரையறையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் குறிப்பிட்டார்.

3000 அழைப்புகள்

கடந்த வியாழன் அன்று தங்கம் சார்ந்த மூன்று திட்டங்களை பிரதமர் அறிவித்தார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்காக அமைக் கப்பட்ட கால் சென்ட்ருக்கு 3000 அழைப்புகள் வந்திருக்கின்றன. மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது என்பதையே இந்த அழைப்புகள் காண்பிக்கின்றன என்று பொருளாதார விவகாரங் களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் மேலும் அவர் கூறியதாவது.

இந்த திட்டங்களின் மீது முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தங்கம் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை இப்போதைக்கு 32 சோதனை மையங்களை அமைத்திருக்கி றோம். இந்த மையங்களில் தங்கத் தின் தூய்மையை சோதனை செய்து உருக்கப்படும். அதன் பிறகு படிப்படியாக மற்ற மையங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

இந்த வருடம் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x