

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு ஆலோசனை அறிக்கையை அளித்துள்ளன.
இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங் கள் தங்கள் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன. பிரான்சில் உள்ள நிறுவன மேலிடம் அறிவுறுத்தும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு அவை பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.
பிரான்ஸில் உள்ள தங்களது பணியாளர்கள் பத்திரமாக உள்ள தாக டிசிஎஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள இன்ஃபோ சிஸ் நிறுவன மேலதிகாரிகள் தெரிவிக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு தனது பணியாளர்களை இன்ஃபோசிஸ் வலியுறுத்தியுள்ளது.
பாரிஸில் நிகழ்ந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள ஹெச்சிஎல் நிறுவனம் இத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து பிரெஞ்சு மக்கள் மீண்டு வர பிரார்த்திப்பதாக தெரிவித்துள் ளது.
தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கிய மானது. அவர்களை காப்பதுதான் தங்களது பிரதான நோக்கம் என்று அந்நிறுவனம் மேலும் தெரி வித்துள்ளது. தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பணியாளர் களைக் கேட்டுக் கொண்டுள்ளது.