

வோடபோன் நிறுவனம் மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு இடைக்கால கட்டணமாக ரூ.2,000 கோடி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வோடபோன் இந்தியா நிறுவன இணைப்பு விவகார வழக்கில் திங்கள்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் இந்தியா நிறுவனம் தனது 4 துணை நிறுவனங்களை இணைத்துக் கொள்ள மத்திய தொலைத் தொடர்பு துறையின் அனுமதியை கோரியது. இதற்கு தொலை தொடர்பு துறை ரூ.6,678 கோடியை கட்டணமாக கேட் டிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்துக்கான மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
நிறுவன இணைப்பு விஷயத்தில் வோடபோன் இந்தியா நிறுவனம் விதிமுறை களை பின்பற்றவில்லை. நிறுவன இணைப்புக்கு முறையான அனுமதி பெறவில்லை. இதர நடைமுறைகளும் நிலுவையில் உள்ளன என்று தொலை தொடர்பு துறை கூறியது. இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பெஞ்ச் விசாரித்தது.
வோடபோன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 22 சர்க்கிள்களில் சேவைகளை அளித்து வருகிறது.
இதன் துணை நிறுவனங் களான வோட போன் ஈஸ்ட், வோடபோன் சவுத்,வோடபோன் செல்லுலார் மற்றும் வோடபோன் டி லிங் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வைத்துள்ளது. இந்த நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைப்பதன் மூலம் ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டது.