Published : 28 Nov 2015 08:38 AM
Last Updated : 28 Nov 2015 08:38 AM

இவரைத் தெரியுமா?- சுனில் கனோரியா

இந்திய வர்த்தக சபைகள் சங்கமான அசோசெம்-ன் புதிய தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து  இன்பிராஸ்ட்ரெக்சர் பைனான்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

வியாம் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

மத்திய நேரடி வரி ஆலோசனைக் குழு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஹிப்போ இன்பிராஸ்ட்ரெக்சர் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். மேலும் இந்நிறுவனத்தில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

2010 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.

பத்தாவது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் கட்டுமான வேலைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

உள்கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் ஆகிய துறையில் 28 வருட பணி அனுபவம் கொண்டவர்.

இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x