Published : 13 Mar 2021 02:58 PM
Last Updated : 13 Mar 2021 02:58 PM

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அதானி: அமேசான் ஜெப் பெசோஸையும் பின்னுக்கு தள்ளினார்

கெளவுதம் அதானி

புதுடெல்லி

உலகளவில் இந்த ஆண்டு அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் ஜெப் பெசோஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார்.

உலகின் முதலிடத்தில் உள்ள பணக்காரர் என்ற இடத்துக்கு போட்டியிட்ட அமேசானின் ஜெப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்த ஆண்டு அதானி குழும பங்குகளில் ஒன்றை தவிர அனைத்தும் 50 சதவீத வளர்ச்சி கண்டன. அதேசமயம் முகேஷ் அம்பானி இந்த சமயத்தில் சுமார் 58,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

கெளவுதம் அதானி

கெளதம் அதானியின் வளர்ச்சி

மும்பையி்ல கடந்த 1980களில் வைர தொழிலில் கால் பதித்த குஜராத்தை சேர்ந் தொழிலதிபர் கெளவுதம் அதானி அதில் ஜொலிக்கவில்லை. இதையடுத்து ஊருக்கு திரும்பிய அதானி சகோதருடன் சேர்ந்து பிளாஸ்டிக் இறக்குமதி தொழில் ஈடுபட்டார்.

1988ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அடுத்த பத்து வருடங்களில் முந்த்ராவில் தனி துறைமுகத்தை உருவாக்கினார். தற்போது இந்தியாவின் பெரிய தனியார் துறைமுகங்களைக் கொண்ட நிறுவனமாக அதானி குழுமம் வளர்ந்தது . தொடர்ந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, நிலக்கரி சுரங்கத்துறையிலும் சென்று உலகம் முழுவதும் தொழில் செய்து வருகிறது.

அதானி குழுமம் கடந்த சில மாதங்களில் உலகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றன.

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றன. அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் இந்தாண்டு 96% உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் 90%, அதானி மின் நிறுவனம், துறைமுகங்கள் போன்றவை 52% வருவாய் ஈட்டி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x