எப்.எம். ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.5,000 கோடி கிடைக்கும்: கிரிசில் கணிப்பு

எப்.எம். ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.5,000 கோடி கிடைக்கும்: கிரிசில் கணிப்பு
Updated on
1 min read

மூன்றாவது கட்ட எப்.எம். ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.5,000 கோடி கிடைக்கும் என்றும் தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித் துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஏலங்களின் மூலம் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,700 கோடி கிடைத்திருக்கும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட ஏலத்தில் 839 அலைவரிசைகளுக்கு ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலங்கள் 3 சுற்றுகளாக நடக்க வுள்ளன. முதல் சுற்று ஏலம் கடந்த ஜூலை 27-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 16-ம் தேதி முடிவடைந்தது.

இதில் 135 அலைவரி சைகளுக்கு ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள அலை வரிசைகளுக்கு 2-வது சுற்று ஏலத்துக்கான தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. டைம்ஸ் குழுமம், ஹெச்டி மீடியா, ரிலையன்ஸ் பிராட் காஸ்ட் நெட்வொர்க், மியூசிக் பிராட்காஸ்ட் மற்றும் டிஜிட்டல் ரேடியோ ஆகிய ஐந்து நிறுவனங்கள் 40 சதவீத அலைவரிசையை வைத்துள்ளன. இந்த ஐந்து நிறுவனங்கள் செலுத்திய உரிமக் கட்டணம் 3,000 கோடி ரூபாய் என்று கிரிசில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in