ஃ புல்லெர்டான் லாபம் 24% உயர்வு

ஃ புல்லெர்டான் லாபம் 24% உயர்வு
Updated on
1 min read

ஃபுல்லெர்டான் இந்தியா கிரெடிட் கம்பெனி நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 188 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 24% கூடுதலாகும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,388 கோடியாக உயர்ந்தது.

இது முந்தைய நிதி ஆண்டில் ஈட்டியதைவிட 17% அதிகமாகும். நிறுவனத்தின் வாராக்கடன் அளவு 2.11 சதவீதத்திலிருந்து 1.72 சதவீதமாகக் குறைந்தது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 397 கிளைகள் மூலம் சொத்து அடமான கடன் , வர்த்தக வாகன கடன், இரு சக்கர வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல சேவைகளை அளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in