

பார்ச்சூன் இந்தியா வெளியிட்ட இந்திய தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் எஸ்பிஐ வங்கியின் அருந்ததி பட்டாச்சார்யா இந்த ஆண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். நான்காவது இடத்தில் ஹெச்பிசிஎல் தலைவர் நிஷி வாசுதேவாவும், ஐந்தாவது இடத்தில் ஏஇசட்பி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஜியா மோடியும், கேப் ஜெமினி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருணா ஜெயந்தியும் உள்ளனர்.
கடந்த வருட பட்டியலில் உள்ள முதல் ஐந்து இடங்களில் இந்த வருடமும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஐந்தாவது இடத்தை பகிர்ந்து கொண்ட அருணா ஜெயந்தி கடந்த வருடம் ஏழாவது இடத்தில் இருந்தார்.
தவிர இந்த வருடத்தில் 50 பேர் பட்டியலில் இருவர் மட்டுமே புதுமுகங்கள். போர்டியா நிறுவ னத்தின் மீனா கணேஷ் 43 வது இடத்தையும், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே 50-வது இடத்திலும் உள்ளனர். முதலி டத்தில் உள்ள பட்டாச்சார்யா வங்கியில் பல சீர்த்திருத்தங் களை செய்திருக்கிறார் என்று பார்ச்சூன் இந்தியா தெரிவித் திருக்கிறது.
வங்கி, மீடியா, நிதி, ஹெல்த்கேர், பேஷன், என்டர் டெயின்மென்ட் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இதில் 40 வயது முதல் 71 வயதுள்ள பெண்கள் உள்ளனர். பிரீதா ரெட்டி (அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்), மல்லிகா னிவாசன் (டாபே) சித்ரா ராமகிருஷ்ணா (என்.எஸ்.இ), கிரண் மஜூம்தார் ஷா (பயோகான்) உள்ளிட்டோர் இந்த பட்டியலில் உள்ளனர்.