

அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிறுவனமான இ-பே இந்தியாவில் ‘பிளாக் பிரைடே’ என்னும் அதிரடி தள்ளுபடி விற்பனையைக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு `பிளாக் பிரைடே’ என் னும் பெயரில் இ-காமர்ஸ் நிறுவனங் கள் அதிக தள்ளுபடி வழங்கும்.
சர்வதேச அளவில் நவம்பர் 27-ம் தேதி பிளாக் பிரைடேவாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்தியாவில் நேற்று முதல் அதிக தள்ளுபடியை இபே அறிவித்திருக்கிறது.
எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உப யோக பொருட்கள் உள்ளிட்ட வற்றை அதிக தள்ளுபடியில் வரும் 30-ம் தேதி வரை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஷன் வகைகளுக்கு அதிகபட்சமாக 50 சதவீத தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகபட்சமாக 45 சதவீத தள்ளுபடியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கியமான பிராண்ட்களை இப்போது அதிக தள்ளுபடியில் இந்தியர்கள் வாங்கலாம் என்று இ-பே இந்தியா தலைவர் நவின் மிஸ்திரி தெரிவித்தார்.