

கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதல் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 94,561 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. இதில் டிசிஎஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்தது.
பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்ததை அடுத்து சென்செக்ஸ் 26,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,369 கோடி சரிந்து ரூ.4,72,370 கோடியாக இருக்கிறது.
அதேபோல ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மதிப்பு ரூ.19,763 கோடி, சன்பார்மா சந்தை மதிப்பு ரூ.14,907 கோடி, இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ8,636 கோடி, ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 7,486 கோடி ரூபாய் அளவில் சரிந்து முடிந்தது. இதேபோல ரிலையன்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகளின் சந்தை மதிப்பும் சரிந்தன.
ரூ. 2,800 கோடி வெளியேற்றம்
கடந்த இரு வாரங்களாக இந்திய சந்தையில் இருந்து 2,800 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக் கிறது.
இதில் பங்குச்சந்தையில் இருந்து 2,505 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 313 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் 22,350 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது.