

பிரபல தொழிலதிபரும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனருமான பிரிஜ் மோகன்லால் முன்ஜால் நேற்று முன்தினம் மாலை கால மானார். அவருக்கு வயது 92.
இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹீரோ மோட்டோகார்ப் குழும நிறுவனங்களின் தலைவர் (எமெரிடஸ்) பொறுப்பிலிருந்து முன்ஜால் விலகி இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத உறுப்பினராக தொடர்ந்தார்.
1940-ம் ஆண்டுகளில் நான்கு சகோதரர்களுடன் சைக்கிள் உற்பத்தியில் இறங்கினார் முன்ஜால். 1956ம் ஆண்டு ஹீரோ குழும நிறுவனம் உருவானது. இந்நிறுவனம் இன்று 400 கோடி டாலர் குழுமமாக வளர்ந்துள்ளது.
1923-ம் ஆண்டு இப்போது பாகிஸ்தானில் உள்ள கமாலியா எனுமிடத்தில் பிறந்தார். நாடு சுதந்திரமடைந்தபிறகு சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை லுதியானாவில் தொடங்கினார். இவர் தொடங்கிய நிறுவனங்கள் பலவும் முதலி டத்தில் உள்ளன. இரு சக்கர வாகன உற்பத்தியில் உலகின் முதலாவது நிறுவனமாக தொடர்ந்து 14 ஆண்டுகளாக உள்ளது. சைக்கிள் தயாரிப்பில் 1986-ம் ஆண்டிலிருந்து ஹீரோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
1984-ம் ஆண்டு ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் சேர்ந்து ஹீரோ ஹோண்டா தயாரிக்கப்பட்டது. இரு நிறுவ னங்களும் 2011-ம் ஆண்டு பிரிந்தன. சிஐஐ, எஸ்ஐஏஎம், ஏஐசிஎம்ஏ, பிஹெச்டி உள்ளிட்ட தொழில் வர்த்தக சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித் துள்ளார்.