

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று சிட்டி குழுமம் கணித்திருக்கிறது. கச்சா எண்ணெய் சரிவு, தங்கம் இறக்குமதி சரிவு ஆகிய காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 2,060 கோடி டாலராக நடப்பு கணக்கு பற்றாக்குறை (ஜிடிபியில் 1 சதவீதம்) இருக்கும். கடந்த நிதி ஆண்டில் 2,800 கோடி டாலராக (ஜிடிபியில் 1.4 சதவீதம்) இருந்தது. முதல் ஏழு மாதங்களுக்கான வர்த்தகப்பற்றாக்குறை 7,776 கோடி டாலராக இருக்கிறது.
இந்த நிலைமையில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு, நிலையான கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.