ஏற்றுமதியை உயர்த்த பேக்கேஜிங்கில் புதுமைகள் தேவை: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

ஏற்றுமதியை உயர்த்த பேக்கேஜிங்கில் புதுமைகள் தேவை: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
Updated on
1 min read

பேக்கேஜிங்கில் புதுமைகள் புகுத்தும் போதுதான் ஏற்றுமதியை உயர்த்த முடியும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மும்பையில் நடந்த இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் பட்டமளிப்பு விழாவில் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

பேக்கேஜிங் என்பது கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அழகுணர்ச்சி ஆகியவற்றின் கலவையாகும். பேக்கேஜிங் மெட்டீரியல் சந்தையில் ஆசியா வின் சந்தை பங்கு 41 சதவீதமாகும். இதில் ஐரோப்பாவின் பங்கு 22 சதவீதமாகவும், அமெரிக்காவின் பங்கு 21 சதவீதமாக இருக்கிறது.

பேக்கேஜிங் படிப்பு முடித்து வெளியே வரும் மாணவர்கள் புதிய நிறுவனங்களை தொடங்கி பேக்கேஜிங் வடிவமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இது புதிய தொழில்முனைவோர் களின் காலம். மாணவர்கள் சேர்ந்து தொழில் தொடங்கும்போது அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் தொழில்முனைவோர்களாக உரு வாகலாம். ஏற்கெனவே பிரதமர் மோடி ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்கு உதவுவதாக அறிவித் திருக்கிறர்.

அனைத்து விதமான பொருட் களுக்கும் பேக்கேஜிங் தேவைப் படும். பொருட்களை பயன்படுத் திய பிறகு மீதமாகும் பேக்கேஜிங் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். அதனால் பைபர், பிளாஸ்டிக் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்காமல் சணலை கொண்டு வடிவமைக் கலாம்.

சர்வதேச மந்த நிலை காரண மாக ஏற்றுமதி இலக்கினை அடைவதில் சவால்கள் உருவாகி உள்ளன. அதனை எட்டுவதில் அரசாங்கம் முனைப்புடன் இருக் கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in