அமித் மாலிக் - இவரைத் தெரியுமா?

அமித் மாலிக் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ இந்தியா மற்றும் சார்க் நாடுகளில் சிஸ்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

$ 2008 முதல் 2013 வரை சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார்.

$ சிஸ்கோ சிறு தொழில் பிரிவின் இந்தியா மற்றும் சார்க் நாடுகளுக்கான தலைவர், வட கிழக்கு பகுதிகளுக்கான மண்டல தலைமை என முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.

$ 24 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்டவர். எலெக்ட்ரிக்கல், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

$ சிமென்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளில் இந்தியா மற்றும் ஜெர்மனியில் 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

$ எம்ஐடி மணிபால் கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் பட்டம் பெற்றவர். புதுடெல்லி ஐஎம்ஐ கல்வி நிறுவனத்தில் மேலாண்மையில் உயர்கல்வி முடித்துள்ளார்.

$ சிஐஐ-யின் உற்பத்தித் துறைக்கான குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in