Published : 04 Nov 2015 09:26 AM
Last Updated : 04 Nov 2015 09:26 AM

4 வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்கள் நியமனம்

4 பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்களை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் செயல் இயக்குநர் சுரேஷ் என் படேல் ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தேனா வங்கியின் செயல் இயக்குநர் ஆர்.கே.தாக்கர், யூகோ வங்கியின் நிர்வாக இயக்கு நராகவும், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக உள்ள மகேஷ் குமார் ஜெயின், நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

அவர் கடந்த 2-ம் தேதி நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். யூகோ வங்கியின் செயல் இயக்குநர் ஜே.கே.கார்க், கார்ப்பரேஷன் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய் யப்பட்டிருக்கிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x