

தங்கம் தொடர்பான மூன்று திட்டங் களை இம்மாத தொடக்கத்தில் பிரமதர் மோடி தொடங்கி வைத்தார். அதில் தங்க டெபாசிட் திட்டத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. 400 கிராம் தங்கம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதேபோல தங்கம் கடன் பத்திரத்தின் முதலீட்டு காலம் நேற்று முடிவடைந்தது. இந்த பத்திரங்கள் மூலமாக 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டிருக்கும் என்று தெரிகிறது.
நேற்று முன் தினம் 145 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப் பட்டிருந்த நிலையில் நேற்று கூடு தலாக 5 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்திருக்கும் என்று பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது போன்ற திட்டம் இப்போது தான் முதல் முறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதால் இந்த திட்டத் தின் மூலம் திரட்டப்பட்ட தொகை வரவேற்கக்கூடியதே என்றார்.