சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் 9 சதவீதம் உயர்வு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் 9 சதவீதம் உயர்வு
Updated on
1 min read

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 9 சதவீதம் உயர்ந்து 112 கோடி ரூபாயாக இருக்கி றது. கடந்த வருடம் இதே காலாண்டில் 102.91 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்து 7,104 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 7,021 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.86 சதவீத மாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6.14 சதவீத மாக இருந்தது. நிகர வாராக்கடனும் 3.38 சதவீதத்தில் இருந்து 3.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்றைய முகூர்த் வர்த்தகத்தில் இந்த பங்கு ரூ.68-ல் முடிவடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in