

தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக டைகான் அமைப்பு ஒவ்வொரு வருடமும் விருதுகளை வழங்குகிறது. இந்த வருடத்துக்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொழிலதிபர் நல்லி குப்பு சாமிக்கு வாழ்நாள் சாதனையா ளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை காக்னிசென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் லஷ்மி நாராயணன் வழங்கினார்.
தவிர இந்த வருடத்துக்கான தொழில்முனைவோர் விருது அபரஜிதா கார்பரேட் சர்வீசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அந்த நிறுவனத்தின் தலைவர் கே.எஸ்.பரத் மற்றும் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.
அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் விருது புரொடாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வேதாந்த் ஜாவருக்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த புதிய தொழில்முனைவோர் விருது சார்ஜ்பி நிறுவனத்தின் கிரிஷ் சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது.