

கடந்த வருடம் செப்டம்பர் முதல் இந்த செப்டம்பர் வரை 19 நிறு வனங்கள் புதிதாக பங்குச்சந்தை யில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 11 நிறுவனங்கள் முதலிட்டாளர் களுக்கு லாபத்தை பெற்றுள்ளன என்று சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் கன்ஜ் பன்சால் தெரிவித்தார்.
இதில் மீதமுள்ள 8 நிறுவனங்கள் வெளியீட்டு விலையை விட குறைந்து வர்த்தகமாகின்றன. இதில் ஸ்னோமென் லாஜிஸ் டிக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர் களுக்கு அதிக லாபத்தை கொடுத் திருக்கிறது. இந்த பங்கின் வெளி யீட்டு விலை 47 ரூபாய். ஆனால் இப்போது 80 சதவீதம் உயர்ந்து 84 ரூபாயில் வர்த்தகமாகிறது.
இதற்கடுத்து வி.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமும் 80 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. 205 ரூபாய்க்கு வெளியான இந்த பங்கு இப்போது 368 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது.
சாரதா குரோப்கெம் பங்கு 57 சதவீத லாபத்தை கொடுத்திருக் கிறது. ஷெமரூ என்டர்டெயின் மென்ட் வெளீட்டு விலையை விட 57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே போல சின்ஜீன் இண்டர்நேஷனல், பிஎன்சி இன்பிராடெக், மன்பசந்த் பெவரேஜஸ், பிரபாத் டெய்ரி, ஸ்ரீ புஷ்கர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் மற்றும் ஐநாக்ஸ் விண்ட் ஆகிய நிறுவனங்களும் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
ஆனால் அதே சமயத்தில் அட்லேப்ஸ் என்டர்டெயின்மென்ட், மான்டே கார்லோ பேஷன்ஸ் ஆகிய இரு பங்குகள் முதலீட்டாளர் களுக்கு 30 சதவீத நஷ்டத்தை தந் துள்ளன. தவிர எம்இபி இன்பிரா டெவலப்பர்ஸ், யூஎப்ஓ மூவிஸ், பென்னார் இன்ஜினீயரிங் மற்றும் பவர் மெக் புராஜக்ட்ஸ் ஆகிய நிறு வனங்கள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன.