

ரெட்ஸ்டோன் நிறுவனம் உருவாக் கிய ஸ்டார்ட் அப் நிறுவனமான குரோபர் (Groffr), மற்றொரு ஆன்லைன் நிறுவனமான குரோபர்ஸ் (Grofers) மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் பெயரைப் போலவே குரோபர்ஸ் நிறுவனமும் பெயர் வைத்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இது மிகப் பெரும் பெயர் குழப்பத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு தீர்வு அளிக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ரெட்ஸ்டோன் நிறுவனம் குரோபர் என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனத்தை உருவாக்கி ரியல் எஸ்டேட், கார், மின்னணு பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தைப் போல உச்சரிப்புடன் கூடிய நிறுவனமாக குரோபர்ஸ் என பெயரிட்டு மளிகை பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக கடந்த 4-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து இரு நிறுவனங் களும் தங்கள் வாடிக்கையாளர் களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளித்து வெவ்வேறு நிறுவனம் என்பதை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு நிறுவனங்களுக்கும் மூன்று வார கால அவகாசத்தை நீதிபதி வால்மிகி மேத்தா அளித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கு மீண்டும் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
குர்காவ்னை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் குரோபர்ஸ் நிறுவனம் இடைப் பட்ட காலத்தில் 10 கோடி டாலர் மூலதனத்தை திரட்டியுள்ளது. அறிவுசார் சொத்து காப்புரிமை சட்டத்தின்படி தவறான தகவல் களை அளித்து நிதி திரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் இரு நிறுவனங்களிடையிலான தற்போதைய வழக்கு வர்த்தகம், சேவையளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பதால் குரோபர் நிறுவனத்தை வாதி என்றும் குரோபர்ஸ் நிறுவனத்தை பிரதிவாதி என்றும் நீதிமன்றம் எடுத்துக் கொண்டு வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தது.
இரு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. குரோபர் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டுள்ளது. குரோபர்ஸ் நிறுவனம் 2013-ல் தொடங்கப்பட்டது. இது முன்னர் ஒன் நெம்பர் கம்பெனி என்ற அழைக்கப்பட்டது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.