Published : 23 Nov 2015 09:06 AM
Last Updated : 23 Nov 2015 09:06 AM

ரூ.8,200 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது

நவம்பர் மாதத்தில் இதுவரை 8,272 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 5,713 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,565 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது. நவம்பர் 2 முதல் 19-ம் தேதி வரை இந்த தொகை வெளியேறி இருக்கிறது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் 23,350 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 லட்சம் கோடி முதலீடு

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்திய கடன் சந்தையில் 2.06 லட்சம் கோடி ரூபாய் நிகர முதலீடு செய்திருக்கின்றன. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் 5.87 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்கள் கடன் சந்தையில் முதலீடு செய்திருந்தன.

இதே காலத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நிகர முதலீடாக 52,531 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இபிஎப்ஓ கூடுதல் முதலீடு

இபிஎப்ஓ அமைப்பு நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 750 கோடி ரூபாயை பங்குச்சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது 5,750 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் பிஎப் அமைப்புக்கு கூடுதலாக கிடைக்கும் தொகை 1 லட்சம் கோடி ரூபாய் என்று கணிக் கப்பட்டிருந்தது. இப்போது 1.15 லட்சம் கோடி ரூபாய் கிடைக்க இருப்பதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி ஆண்டில் கூடுதலாக கிடைக்கும் தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது திட்டமாகும்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2,322 கோடி ரூபாய் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x