Published : 14 Nov 2015 11:15 AM
Last Updated : 14 Nov 2015 11:15 AM

இவரைத் தெரியுமா?- சஞ்சய் சேத்தி

$ இ-காமர்ஸ் நிறுவனமான ஷாப்குளூஸ் டாம் காம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2011 லிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 2004 முதல் 2011 வரை இபே இ-காமார்ஸ் நிறுவனத்தில் தயாரிப்புகளுக்கான முதன்மை இயக்குநராக பொறுப்பு வகித்துள்ளார்.

$ டிரேட்பீம் சர்வதேச நிறுவனத்தின் மேம்பாட்டு மேலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ 1993 முதல் 1995 வரை இரண்டு ஆண்டுகள் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனத்தில் இளநிலை மேலாளராகப் பதவி வகித்தவர்.

$ 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறை அனுபவம் கொண்டவர். ஹெச்சிஎல் பெட்ரோ சிஸ்டம்ஸ், ஐஐஎஸ் இன்போடெக் போன்ற நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இளநிலைப்பட்டம் பெற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஐஐஏ கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x