பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பென்ஷன் தொகையை உயர்த்த திட்டம்

பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பென்ஷன் தொகையை உயர்த்த திட்டம்
Updated on
1 min read

பங்குச்சந்தையில் முதலீடு செய் யப்படும் பென்ஷன் தொகையினை 50 சதவீதமாக உயர்த்த நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவ தாக பென்ஷன் பண்ட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் தெரிவித் துள்ளார்.

இது குறித்து நிதி அமைச்ச கத்துடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். எங்களது கோரிக் கைகளை நிதிமைச்சகம் பரி சீலனை செய்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இது குறித்த உத்தரவு வரலாம், ஆனால் எப்போது என்பது தெரிய வில்லை என்று காண்ட்ராக்டர் கூறினார்.

பென்ஷன் பண்ட் ஒழுங்கு முறை ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) தற்போது அதிகபட்சமாக 15 சதவீத தொகையினை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். தேசிய பென்ஷன் திட்டத்தின் (என்பிஎஸ்) முதலீட்டு முறைகள் குறித்து முடிவினை பரிசீலனை செய்ய செபியின் முன்னாள் தலைவர் ஜி.என். பாஜ்பய் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது.

அந்த குழு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பென்ஷன் தொகையினை அதிகப் படுத்தலாம் என்று பரிந்துரை செய்தது. தற்போது என்பிஎஸ் திட்டத்தின் கீழ் உள்ள தொகை, அரசாங்க பத்திரங்கள், கார்ப்பரேட் பத்தி ரங்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன.

தேசிய பென்ஷன் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 82,000 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. இதில் தனியார் துறையின் பங்கு சுமார் 5,000 கோடி ரூபாயாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in