பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளை கடந்தது
Updated on
1 min read

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்து காணப்படுகிறது. பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படாததுடன் பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டு உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்துள்ளன. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் மூன்றாம் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளன. இதன் தாக்கமும் பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 525 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 69 ஆக இருந்தது. இது பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.

தேசியப் பங்குச்சந்தை நிப்டி 139 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 302 ஆக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in