உற்பத்தியை இரு மடங்காக்க ராயல் என்பீல்டு திட்டம்

உற்பத்தியை இரு மடங்காக்க ராயல் என்பீல்டு திட்டம்
Updated on
1 min read

ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன பிரிவான ராயல் என்பீல்டு தனது உற்பத் தியை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது ஆலையை அமைப் பதன் மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள ஆலையில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் 4.5 லட்சம் வாகனங்கள் தயா ரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற் காக ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடி, இந்த திட்டத்துக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.

வல்லம் வடகல் என்னும் இடத்தில் மூன்றாவது தொழிற் சாலை அமைய இருக்கிறது என்று ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த்த லால் தெரிவித்தார். இதற்கான ஆரம்பகட்ட பணி கள் அடுத்த ஆண்டு தொடங்கப் படும். எவ்வளவு தொகை முத லீடு செய்யப்படும் என்பதை இயக்குநர் குழு கூடி முடிவெடுக் கும் என்றார்.

மேலும் புதிதாக இரு மாடல் வாகனங்களை வெளியிட இருக்கிறோம். ஒரு மாடல் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும், இன் னொரு மாடல் 2017-ம் ஆண்டும் வெளியிடப்படும். அடுத்த வருடத் தின் முதல் பாதியில் அமெரிக்கா வில் மில்வாகி என்னும் இடத்தில் பிரத்யேக விற்பனையகம் தொடங்கப்படும் என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசியா தலைநகரான ஜகார்தாவில் முதலாவது பிரத்யேக விற்பனையகத்தை ராயல் என்பீல்டு திறந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in