

அழுத்த ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் நாட்டின் முதல் டிராக்டரை கட்கரி நாளை அறிமுகப்படுத்துகிறார்.
அழுத்த ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி நாளை அறிமுகப்படுத்துகிறார்.
ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த மாற்றம், செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர், பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
இதன் மூலம் வருடத்திற்கு ரூ 1 லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளால் சேமிக்க முடியும் என்பதால், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.