Published : 11 Feb 2021 12:44 PM
Last Updated : 11 Feb 2021 12:44 PM

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம்: தமிழகத்தில் 1,54,02,397 பேருக்கு பயன்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

தமிழகத்தில் 1,54,02397 பேர் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் பயனடைந்துள்ளனர்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நாடு முழுவதும் 49 மருத்துவமனைகள் மற்றும் 92 மருந்தகங்கள் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் நேரடியாக நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 15402397 பேர் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் பயனடைந்துள்ளனர்.

தோட்ட தொழிலாளர்கள் சட்டம், 1951-ஐ பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி சூழ்நிலைகள் தொழிலாளர் சட்டம் 2020 , சமூக பாதுகாப்பு சட்டம் 2020 ஆகியவற்றை அரசு கொண்டு வந்தது.

தோட்ட தொழிலாளர்களை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் உறுப்பினர்களாக தோட்ட முதலாளிகளால் இதன் மூலம் இணைக்க முடியும். இதன் காரணமாக நோய்க்கால நன்மைகள், பணியின்மை நிதி, பேறுகால நன்மைகள் உள்ளிட்டவற்றை தொழிலாளர்கள் பெற முடியும்.

நாட்டிலுள்ள குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி முகாம்களில் கல்வி, பயிற்சி, மதிய உணவு, ஊக்கத்தொகை, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் 1979-ஐ பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி சூழ்நிலைகள் தொழிலாளர் சட்டம் 2020-ன் கீழ் அரசு கொண்டு வந்துள்ளது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க துணைக்குழு ஒன்றை நிதி ஆயோக் அமைத்துள்ளது. இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அரசு சார அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் மற்றும் நிபுணர்கள் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை அவர்களது ஆதார் எண்ணுடன் இணைத்து தரவுதளம் ஒன்றை உருவாக்குவதற்கு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதில் அவர்களை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தலாம்.

சமூக பாதுகாப்பு விதி, 2020 இந்திய அரசிதழில் 2020 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை அமைச்சகம் வரவேற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x