

ஹரியாணா, பகதூர்கரை சேர்ந்த ரித்தேஷ் அகர்வால் என்பவரை போலி நிறுவனங்கள் மூலம் சிகரெட்டுகளை ஏற்றுமதி செய்ததாக கணக்குக் காட்டி உள்ளீட்டு வரி கடனை மோசடியாக பெற்றதற்காக கைது செய்தது.
எஸ் ஆர் இம்பெக்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான ரித்தேஷ் அகர்வால், எஸ் ஆர் இன்டெர்நேஷனல் என்ற நிறுவனத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த நிறுவனங்களின் தொடர்பில் ஆறு போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அனைத்தும் ரித்தேஷ் அகர்வாலின் கட்டுப்பாட்டில் இருந்தன.
மேற்கண்ட நிறுவனங்களின் மூலம், சரக்குகளை விற்காமலேயே ரசீதுகளை தயாரித்து ரூ 376 கோடி உள்ளீட்டு வரி கடனை அவர் பெற்றுள்ளார். மேலும், சரக்கு மற்றும் சேவை வரித் துறையிடம் இருந்து ரூ 37.13 கோடி அவர் திரும்ப பெற்றுள்ளார்.
டெல்லி மற்றும் ஹரியாணா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அகர்வால் மோசடியில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டு, 2021 பிப்ரவரி 9 அன்று அவர் கைது செய்யப்பட்டார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.