ஆன்லைன் மூலம் ரூ.250 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனை

ஆன்லைன் மூலம் ரூ.250 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனை
Updated on
1 min read

ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறை யில் முன்னிலை வகித்து வரும் ஹவுசிங் டாட் காம் நிறுவனம் தீபாவளி பண்டிகை விற்பனையில் ரூ. 250 கோடி மதிப்புள்ள வீடுகளை விற்பனை செய்துள்ளது.

அக்டோபர் 29 முதல் நவம்பர் 22 வரை நடந்து கொண்டிருக்கும் எக்ஸ்போ மூலம் 1 லட்சம் யூனிட் களை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 கோடி வரை உள்ள வீடுகளை தள்ளுபடி மற்றும் இலவசங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

60,000 வாடிக்கையாளர்கள் வீடுகளை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளார்கள். கடந்த வாரம் மற் றொரு ஆன்லைன் நிறுவனமான ஸ்நாப்டீல் அறிவித்த ``தீபாவளி ஹோம் ஷாப்பிங் பெஸ்டிவல்” ஆபரை பயன்படுத்தி , 10,000 வாடிக்கையாளர்கள் வீடுகளை வாங்கியுள்ளார்கள்.

ரூ.250 கோடி ஜிஎம் வேல்யூ (GMV) கொண்ட வீடுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டன. மேலும் 150 வடிவமைப்பாளர்கள் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்த எக்ஸ்போவில் பங்கு பெறுகின்றனர் என்று ஹவுசிங் டாட் காம் தெரிவித்துள்ளது.

பிரிஸ்டிஜ் குரூப், கோத்ரேஜ், ஹிரானந்தனி, மஹிந்திரா, ஏடிஎஸ், ஜேபி கிரீன்ஸ், லைப்ஸ்டைல் போன்ற நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வாடிக்கை யாளர்கள் இந்த எக்ஸ் போவில் பங்கு பெற்றுள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in