காணொலியில் 8-வது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி: ஸ்மிருதி  இரானி தொடங்கி வைத்தார்

காணொலியில் 8-வது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி: ஸ்மிருதி  இரானி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

8-வது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி இன்று காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இணையதளத்தில் நேற்று முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியாக விளங்கும்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த கண்காட்சி இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளிநாடுகளைச் சேர்ந்த 200- க்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் பொருட்களை வாங்குவதற்கு ஏற்கெனவே பதிவு செய்திருப்பதாகவும், இந்தியாவில் உள்ள அவர்களது பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் மிகப்பெரும் இந்திய நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின்கீழ் வர்த்தகத் துறையின் நிதி உதவியுடன் இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நடத்தும் இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி, பட்டு மற்றும் பட்டு கலந்த பொருட்களின் மிக முக்கிய கண்காட்சி ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in