நிலக்கரி விற்பனை: சுரங்க ஏலத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பு

நிலக்கரி விற்பனை: சுரங்க ஏலத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பு
Updated on
1 min read

நிலக்கரி விற்பனைக்காக நான்கு நிலக்கரி சுரங்கங்களின் (செண்டிப்பாடா & செண்டிப்பாடா-II, குரலோய் (ஏ) வடக்கு மற்றும் செரேகர்ஹா) ஏல நடைமுறை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முகமையால் 2020 டிசம்பர் 9 அன்று தொடங்கப்பட்டது. முதல் தடவை இரண்டுக்கும் குறைவான தகுதியுடைய ஒப்பந்தப்புள்ளிகளே வந்ததால் இரண்டாம் தடவையாக ஏல நடைமுறை தொடங்கப்பட்டது.

நிலக்கரி அமைச்சகத்தால் 2020 ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட அலுவலக அறிவிப்பு எண் CBA2-13011/2/2020-CBA2இன் பத்தி 2.2(b)-இன் படி, ரத்து செய்யப்பட்ட முதல் ஏல முயற்சியின் அதே விதிமுறைகளுடன் இரண்டாம் ஏல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், முதல் ஏல நடவடிக்கையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தகுதியுடைய ஏலதாரரின் அதிகபட்ச கேட்பு தொகை இரண்டாம் ஏலத்தின் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 27 ஆகும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 2021 ஜனவரி 28 நண்பகல் 12 மணி முதல் புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இருக்கும் நிலக்கரி அமைச்சகத்தின் அலுவலகத்தில் ஏலதாரர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டன.

கூட்டத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி மூலமாகவோ கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏலதாரர்களுக்கு வழங்கப்பட்டது. முதலில் ஆன்லைன் மூலம் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும், பின்னர் ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகளும் திறக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in