

மதிப்புமிக்க தேசிய பிராண்ட்கள் பட்டியலில் இந்தியா 7-வது இடம் பிடித்திருக்கிறது. கடந்த வருடம் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா, பிராண்ட்களின் மதிப்பு 32 சதவீதம் உயர்ந்ததால் (210 கோடி டாலர்) ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலை ‘பிராண்ட் பைனான்ஸ்’ தொகுத்திருக் கிறது.
இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து நான்காம் இடத்திலும், ஜப்பான் 5-ம் இடத்திலும், பிரான்ஸ் 6-ம் இடத்திலும் உள்ளன. கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் முதல் ஐந்து இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.
உலகின் முதல் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பலம், மதிப்பு, அடுத்த ஐந்து வருடங்கள் விற்பனையின் கணிப்பு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
வியத்தகு இந்தியா(‘Incredible India’) என்னும் பிரச்சார கோஷம் நன்றாக வேலை செய்திருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் பிரச்சினையால் ஜெர்மனி சரிவு கண்டிருக்கிறது. அந்த நாடு தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருந்தாலும் பிராண்ட்களின் மதிப்பு 4 சதவீதம் சரிந்திருக்கிறது.
அதேபோல சீனாவின் பங்குச்சந்தை சரிவு மற்றும் மந்த நிலையும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் என்றும் ‘பிராண்ட் பைனான்ஸ்’ தெரிவித்திருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவின் பிராண்ட் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது.
பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் மதிப்பு சரிந்திருக் கிறது.