Published : 27 Jan 2021 01:10 PM
Last Updated : 27 Jan 2021 01:10 PM

கோவிட்: நாடுமுழுவதும் 65% ரயில்கள் இயக்கம்

கோவிட் சவால்களுக்கு இடையிலும், கரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது 65% ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது

விழாக்கால சிறப்பு ரயில்கள் உட்பட 1138 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களை பல்வேறு மண்டலங்களில் தினமும் இந்திய ரயில்வே இயக்குகிறது.

இந்த சிறப்பு ரயில்களின் மூலம் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிக ரயில்களை விடுவதற்கான தேவை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கோவிட்டுக்கு முன் ஒரு நாளைக்கு சராசரியாக 1768 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வந்தது. 2021 ஜனவரியில் மட்டும் 115 ஜோடி மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இது வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 4807 புறநகர் ரயில் சேவைகளை தற்சமயம் பல்வேறு மண்டலங்களில் தினமும் இந்திய ரயில்வே இயக்குகிறது. கொவிட்டுக்கு முன் 5881 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.

196 பயணிகள் ரயில் சேவைகளும் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகின்றன. கொவிட்டுக்கு முன் சராசரியாக 3634 பயணிகள் ரயில் சேவைகள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x