

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா முதல் முறையாக டெல்லியிலிருந்து இத்தாலிக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வாங்கிய டிரீம் லைனர் போயிஸ் 787 விமானம் இந்த தடத்தில் இயக்கப்படுகிறது.
டெல்லியிலிருந்து ரோம் மற்றும் மிலானுக்கு இந்த விமானம் இயக்கப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் இந்த விமான சேவை இருக்கும். இத்தாலிக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏர் இந்தியா பூர்த்தி செய்துள்ளது.