ஆர்.இ.ஐ.டி.க்கு வரிச்சலுகை வேண்டும்

ஆர்.இ.ஐ.டி.க்கு வரிச்சலுகை வேண்டும்
Updated on
1 min read

முதலீட்டு சந்தையை ஊக்குவிப் பதற்கு மத்திய அரசு வரிச்சலுகை களை வழங்கவேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார். இன்ஃப் ராஸ்ட்ரக்ச்சர் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் மற்றும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் (ஆர்.இ.ஐ.டி.) ஆகிய இரண்டு புதிய திட்டங்களுக்கு வரிச்சலுகை தேவை என்றார்.

ஆர்.இ.ஐ.டிக்கு விதிமுறை களை கூடிய விரைவில் செபி இறுதி செய்யும். ஆனால் மத்திய அரசின் வரிச்சலுகை தொடர்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதே போல இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் இன் வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்க்குமான புதிய விதிமுறைகளை இறுதி செய் யும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதற்கு மத்திய அர சின் நிறுத்திவைக்கும் வரி (withholding tax) தொடர்பான விளக் கங்களுக்காக காத்திருக்கிறது.

இந்த இரண்டு புதிய திட்டங் களும் கட்டுமானத்துறையில் முத லீட்டாளர்கள் முதலீடு செய் வதற்கு ஏற்ப உருவாக்கப் பட்டவை. இதில் முதலீட்டாளர் களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதிமுறைகள் உருவாக் கப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டங்களை பயன் படுத்தி கட்டுமான நிறுவனங் கள் தங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக்கொள்ள முடியும். ஆர்.இ.ஐ.டி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டம், இதை இந்திய சந்தை கள் பயன்படுத்திக்கொள்ள வேண் டும். இதற்கான விதிமுறை கள் தயாராக இருக்கின்றன. அர சாங்கத்தின் வரி தொடர்பான விளக் கங்களுக்கு காத்திருக்கிறோம். கார்ப்பரேட் பாண்டு களுக்கான சந்தையை அதிகப் படுத்த வேண்டும் இந்தியா போன்ற வளரும் நாடு கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in