Published : 25 Jan 2021 08:10 PM
Last Updated : 25 Jan 2021 08:10 PM

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 13-வது தவணையாக ரூ.6,000 கோடி வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 13-வது தவணையாகமத்திய அரசு ரூ.6,000 கோடி வழங்கியது

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் குறைப்புக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி வருகிறது. தற்போது 13வது வாரத் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்பட்டது.

இதிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடியும், டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.

இதுவரை, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையில், 70 சதவீதம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.71,099.56 கோடியும், சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 6,900.44 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இந்த வாரம் வழங்கப்பட்ட தொகை, 5.3083 சதவீத வட்டியில் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இது வரை ரூ.78,000 கோடியை, மத்திய அரசு சிறப்பு ஏற்பாட்டின் மூலம் 4.7491 சதவீத சராசரி வட்டியில் கடனாக பெற்றுள்ளது.

மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.4890.14 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.525.14 கோடி கூடுதலாக கடன் திரட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x