

நகர்ப்புற இந்தியா மற்றும் ரியஸ் எஸ்டேட் துறையின் வரலாறு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்திற்கு முன் மற்றும் பின் என இரண்டு கட்டங்களாக நினைவு கூறப்படும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
”நுகர்வோர் பாதுகாப்பு என்பது அரசுக்கு நம்பிக்கைக்குரிய சட்டப் பிரிவு. எந்த தொழிலுக்கும், நுகர்வோர்தான் ஆதாரம். அவர்கள் நலனை பாதுகாப்பது, தொழில்துறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியம்.
ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த ஒரு துறையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் நிர்வாகத்தைப் புகுத்தியது. அத்துடன், பணமதிப்பிழப்பு, மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்கள் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையை கருப்பு பணத்திலிருந்து சுத்தப்படுத்தியது.
பங்குச் சந்தைக்கு செபி இருப்பது போல், ரியல் எஸ்டேட் துறைக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் உள்ளது. இதன் மூலம் இத்துறை புதிய உச்சத்தைக் கண்டுள்ளது” எனக் கூறினார்.