

மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
கரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன.
இதனால் உற்பத்திப் பொருட்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளைவிட உயர்ந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஆன்லைன் ரீடெயில் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக ஜியோமார்டில், வாட்ஸப் மூலம் ஆர்டர் செய்து கொள்ளும்படி இணைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. பெரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் சில்லறை வணிகத்தில் பெரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸப், ரிலையன்ஸின் ரீடெயில் வணிகத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இன்று ஒன்பதரை மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்து ஐம்பதாயிரத்து 97 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 733 ஆக இருந்தது. மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்தன.