ஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு 2 நடமாடும் எடை தூக்கிகள்: இந்தியா வழங்கியது

ஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு 2 நடமாடும் எடை தூக்கிகள்: இந்தியா வழங்கியது
Updated on
1 min read

இரண்டு நடமாடும் துறைமுக எடை தூக்கிகளை ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்திற்கு இந்தியா அனுப்பியது.

ஈரான் சபஹர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. ஆறு நடமாடும் துறைமுக எடை தூக்கிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய இரண்டு நடமாடும் துறைமுக எடை தூக்கிகளை ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்திற்கு இந்தியா அனுப்பியது.

இத்தாலியிலுள்ள மர்கேரா துறைமுகத்திலிருந்து வந்தடைந்த எடை தூக்கிகள், சபஹர் துறைமுகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தற்போது நடந்து வருகிறது.

140 மெட்ரிக் டன்கள் எடையைத் தூக்கும் திறனுள்ள பல்வகை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக் கூடிய நடமாடும் துறைமுக எடை தூக்கிகள், சபஹரின் ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தில் பல்வேறு வகையான சரக்குச் சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான திறனை இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட்டுக்கு வழங்கும்.

சபஹரின் ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in