

டெல்லியில் ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரிக் கடன் மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிழக்கு டெல்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரக அதிகாரிகள் போலி ரசீதுகளைப் பயன்படுத்திய போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
விரிவான தரவு பகுப்பாய்விற்குப் பிறகு அதிகாரிகள் 21 இடங்களைக் கண்டறிந்து ஜனவரி 15 முதல் 17-ம் தேதி வரை மேற்கொண்ட சோதனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இயங்கும் நிறுவனங்கள் போலி ரசீதுகளின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மண்டலத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ரூ. 3776.69 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த பல்வேறு வழக்குகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.