

திருப்பூரில் 41-வது ஆயத்த ஆடை கண்காட்சி, வரும் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக் காக, இந்தியா நிட்பேர் அசோசி யேஷன் (ஐகேஎப்), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள் இணைந்து, ஆண்டுக்கு இரு முறை, ஆயத்த ஆடை கண் காட்சி நடத்துகின்றன. 41-வது, ஐகேஎப் இலையுதிர் காலம், குளிர்கால கண்காட்சி, திருமுருகன்பூண்டியில் உள்ள பழங்கரை ஐகேஎப் வளாகத் தில், வரும் 7-ம் தேதி தொடங்கு கிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஆ.சக்திவேல், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பிரதமரின் ‘மேக்-இன் இந்தியா’ திட்டத்தை, திருப்பூர் தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். பிராண்ட் இந்தியா திட்டத்தை செயல்படுத்த, முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெ ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்து, ஆர்டர் பெறும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு 44.29 சதவீதம். 2014-15-ம் ஆண்டு, ரூ.20 ஆயிரத்து 730 கோடி யாக இருந்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 2016-17-ம் ஆண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ரூபா யாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்த கத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியா நிட் பேர் ஆயத்த ஆடை கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.