

தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் (என்ஹெச்பிசி) தமிழகத்தில் 50 மெகா வாட் உற்பத்தி செய்யக்கூடிய சூரியமின் உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளது. மதுரையில் சுமார் ரூ. 300 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த ஆலைக் கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் வரும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 50 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க உள்ளதாகவும் அந்நிறு வனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தோடு ஒப்பந்தம் போடவுள் ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.