Published : 12 Oct 2015 07:46 AM
Last Updated : 12 Oct 2015 07:46 AM

ரூ.6,000 கோடி அந்நிய செலாவணி மோசடி: பாங்க் ஆப் பரோடாவில் 2-வது நாளாக சிபிஐ சோதனை

டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் சட்ட விரோதமாக ரூ.6,000 கோடி அந்நிய செலாவணி பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த வங்கிக்குத் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்றும் சிபிஐ சோதனை நடத்தியது.

ஹாங்காங்கிலிருந்து பொருட் களை இறக்குமதி செய்வதாக கூறி முன் பணமாக 59 நிறுவ னங்களின் பெயரில் ரூ.6,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொருட்களின் இறக்குமதி எதுவும் நடக்காத சூழ்நிலையில் சட்டவிரோ தமாக இந்த அந்நிய செலாவணி மோசடியை வங்கி மேற்கொண் டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பரிவர்த்தனையில் ஈடு பட்ட வங்கி அதிகாரிகள் மீதும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கை வைத்திருந்த 59 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.

‘வங்கி அதிகாரிகள் மீதும் மற்றும் 59 நிறுவனங்கள் மீதும் இறக்குமதி செய்யப்படாத பொருட்களுக்காக ஹாங்காங் குக்கு ரூ.6,000 கோடி அந்நிய செலாவணியை 59 நிறுவனங்கள் பெயரில் அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை

இதுபோல் 8,000 பரிவர்த்தனைகளை அசோக் விஹார் கிளை வங்கி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

முந்திரி, அரிசி போன்ற பொருட்களை ஹாங்காங் கிலிருந்து இறக்குமதி செய்வதாக கூறி முன்பணமாக இந்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்கள். ஆனால் இதுவரை எதுவும் இறக்குமதி செய்யப்பட வில்லை.

இதுபோன்ற பரிவர்த் தனைகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் தானாக கண்டறியும் மென்பொருளி லிருந்து தப்பிப்பதற்காக தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.64.5 லட்சம்) பிரித்து இந்த பரிமாற்றங்களை மேற் கொண்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

``மத்திய அரசு ரூ.4,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று சொல்லி கொண்டிருக்கும் அதே வேளையில் ஹாங்காங்குக்கு 59 நிறுவனங்கள் பெயரில் ரூ.6,000 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஈடுபட்ட வங்கி மேலாளரை நீக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார்.

வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பி.எஸ்.ஜெயக்குமார் நாளை பொறுப்பேற்க இருக்கும் சூழ்நிலையில் அந்நிய செலாவணி மோசடியில் வங்கி சிக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x